மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி
10-Oct-2025
பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலையில் ஓரங்களில், முள் செடிகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் பொன்னேரி - பழவேற்காடு இடையே, 18கி.மீ., தொலைவிற்கான மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், பொன்னேரி அடுத்த சின்னகாவணம் - மெதுார் இடையேயான, 3கி.மீ, தொலைவிற்கு சாலையின் இருபுறமும், புளியமரங்கள் உள்ளன. மெதுார் - பழவேற்காடு இடையே உள்ள பகுதியில், சாலையோரங்களில் நிழல்தரும் மரங்கள் எதுவும் இல்லை. அதிகளவில் முள்செடிகளே உள்ளன. சாலையோரங்களில், தேவையான அளவு இடவசதி இருந்தும், நெடுஞ்சாலைத்துறை மரக்கன்றுகளை வைத்து பராமரிப்பதில் அக்கறை கொள்ளாமல் இருப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: க டந்த, 8 ஆண்டுகளுக்கு மு ன், பொன்னேரி - தச்சூர், பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலைகளின் விரிவாக்க பணிகளின் போது, அங்கிருந்த, 1,000க்கும் மேற்பட்ட புளியமரம், தென்னை மற்றும் பனை மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. அவற்றிற்கு மாற்றாக, அந்த சாலைகளின் ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை எங்கும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கவில்லை. தற்போது பொன்னே ரி - பழவேற்காடு சாலை யில் போதிய இடவசதி இருந்தும், கவனம் செலுத்தவில்லை. இந்த சாலையின் ஓரங்களில் உள்ள முள்செடிகளை முழுமையாக அகற்றி விட்டு, மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க வேண்டும். நிழல்தரும் மரங்களாக மாறும்போது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.
10-Oct-2025