உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய மூவர் கைது

கும்மிடிப்பூண்டி:கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி டூ - வீலரில் சென்ற இரு வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம், இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திய, கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஒடிசா வாலிபர் நார்த் கணேஷ், 19, கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லுார் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 22, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த, ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கின்னு நரசிம்மா ரெட்டி, 19, என்பவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி