உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா பறிமுதல் மூவருக்கு சிறை

கஞ்சா பறிமுதல் மூவருக்கு சிறை

திருமழிசை:ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனம் வாயிலாக கஞ்சா கடத்தி வருவதாக, வெள்ளவேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளவேடு போலீசார் திருமழிசை பகுதியில், நேற்று முன்தினம் காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 'யமஹா எப் இசட்' இருசக்கர வாகனத்தில், சென்னை நோக்கி சென்ற மூவரை பிடித்து சோதனை செய்ததில், 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் மோகன்வாடியைச் சேர்ந்த ஷாஜகான், 21, திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஷ், 32, தொழுவூரைச் சேர்ந்த ராஜ்குமார், 38, என்பது தெரியவந்தது. வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார், ஐந்து கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மூவரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை