திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், 1993 - 96ம் ஆண்டு வரை, 6 - 8ம் வகுப்பு வரை படித்த, முன்னாள் மாணவ - மாணவியர், 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, தங்களது பழைய நினைவுகளை பகிந்து கொண்டனர்.தொடர்ந்து, பாடங்கள் கற்பித்த ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், நினைவு பரிசுகள் வழங்கி, ஆசி பெற்றனர்.தற்போது, இந்த மாணவ - மாணவியர் கல்வி, வருவாய், காவல், மின்வாரியம் உட்பட பல்வேறு அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.சில மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் குரூப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.