உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆடிக்கிருத்திகை தெப்ப விழாவிற்கு தயாராகும் திருத்தணி கோவில் குளம்

ஆடிக்கிருத்திகை தெப்ப விழாவிற்கு தயாராகும் திருத்தணி கோவில் குளம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆக., 16ம் தேதி தெப்ப திருவிழா நடக்கவுள்ளதால், சரவணபொய்கை குளம் துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்குளத்தில் உற்சவர் முருகப்பெருமான், மூன்று நாட்கள் தெப்பத்தில் அருள்பாலிப்பார்.நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்ப திருவிழா, ஆக., 14 - 18ம் தேதி வரை நடக்கிறது. இதில், 16 - 18ம் தேதி வரை தெப்ப திருவிழா நடைபெறும்.கோவில் நிர்வாகம் சார்பில், சரவணபொய்கையில் உள்ள தண்ணீர், ராட்சத மின்மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தை துார் வாரி, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ