திருவாலங்காடில் 11 செ.மீ., மழை பதிவு
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் முழுதும் ஒருவாரமாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சில பகுதிகளில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், பலத்த மழை பெய்தது.திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருவாலங்காடில் 11.3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.