உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காரனோடை பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

காரனோடை பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது உள்ள பாலத்தின் வழியாக அதிகப்படியான வாகனங்கள் செல்லும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் பகல் நேரத்திலும் இதே போன்ற நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.போக்குவரத்து போலீசாரும் யாரும் அப்பகுதியில் இல்லாததால், நீண்ட நேரம் பாலத்தில் காத்திருந்து வாகனங்கள் பயணித்தன. பாலத்தின் இருபுறமும் உள்ள ஜனப்பசத்திரம், காரனோடை பகுதியில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி