உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வளர்ப்பு நாயால் விபரீதம்: மாமனார், மருமகன் பலி

வளர்ப்பு நாயால் விபரீதம்: மாமனார், மருமகன் பலி

அம்பத்துார், அம்பத்துார், ஐ.சி.எப்., காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து, 30; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, தன் மாமனார் ரகுபதி, 65; மகன் குறளரசு, 8, மற்றும் வளர்ப்பு நாயுடன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டியில், உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.பின், மதியம் 12:00 மணியளவில், காய்கறி வாங்கிய பின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அம்பத்துார் வாவின் சிக்னலை கடந்து சென்றபோது, ஸ்கூட்டியில் முன்பக்கமாக நின்றிருந்த வளர்ப்பு நாய், சாலையில் குதிக்க முற்பட்டுள்ளது.மாரிமுத்து, நாயை பிடிக்க முயன்றபோது, ஸ்கூட்டி நிலை தடுமாறி, சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் மாரிமுத்து, ரகுபதி, சிறுவன் குறளரசு மூவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த மாரிமுத்து, ரகுபதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான சிராய்ப்புடன் சிறுவன் குறளரசு உயிர் தப்பினான். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை