உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் தொகை கணக்கெடுப்பு: மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு: மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களுக்கு, நேற்று பயிற்சி வகுப்பு தொடங்கியது. திருத்தணி நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர் ஆகியோருக்கு, நகராட்சியில் உள்ள அறிவுசார் மையத்தில், பயிற்சி வகுப்பு தொடங்கியது. இன்றுடன் பயிற்சி வகுப்பு நிறைவடைகிறது. இந்த பயிற்சி வகுப்பை, திருத்தணி நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் தொடங்கி வைத்தார். இதில், நகரமைப்பு அலுவலர் தயாநிதி மற்றும் பயிற்சியாளர்கள் பிரியா, வாசுதேவன் ஆகியோர் பங்கேற்று, மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் முதற்கட்டமாக, வீடுகள் குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி, ஆக., 1ம் தேதி முதல் தொடங்கி, ஆக., 31ம் தேதி நடைபெறுகிறது. இப்பணியை, கணக்கெடுப்பாளர்களை கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள், அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் என, பயிற்சியாளர்கள் எடுத்து கூறினார். இந்த பயிற்சி வகுப்பில், பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி அலுவலர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !