உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி பக்தர்களுக்கு இடையூறு திருநங்கையர் வௌியேற்றம்

சிறுவாபுரி பக்தர்களுக்கு இடையூறு திருநங்கையர் வௌியேற்றம்

ஆரணி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சிறுவாபுரி முருகன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமை மற்றும் தைப்பூசம் என, இரண்டும் சேர்ந்து வந்ததால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பொது தரிசனம், 50 மற்றும், 100 ரூபாய் கட்டண தரிசனம் என, அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை தரிசித்துவிட்டு, வெளியில் வரும் பக்தர்களிடம், திருநங்கையர் சிலர், பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.பக்தர்கள் வெளியேற இடையூறாக இருந்ததால், திருநங்கையரை அங்கிருந்து வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து போகாமல் அங்கேயே இருந்து, வசூலை தொடர்ந்ததால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்த திருநங்கை ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.இதனால் மற்ற திருநங்கையர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், போலீசார், ஒரு வழியாக, திருநங்கையரை அங்கிருந்து வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ