உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மின்சார ரயிலில் கோளாறு திருவாலங்காடில் அவதி

 மின்சார ரயிலில் கோளாறு திருவாலங்காடில் அவதி

திருவாலங்காடு: திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து உள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். நேற்று மாலை 5:50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில் 6:05 மணிக்கு திருவாலங்காடு ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையில் வந்தது. திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். 600க்கும் மேற்பட்ட பயணியர் பயணித்த நிலையில் அவர்கள் 40 நிமிடம் காத்திருந்து 4வது நடைமேடையில் வந்த மாற்று ரயிலில் ஏறிச்சென்றனர். ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின் 7:10 மணிக்கு ரயில் புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி