உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது: தொடரும் பதற்றம்

ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது: தொடரும் பதற்றம்

கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் அருகே உள்ளது ராமசந்திராபுரம். அங்குள்ள திடீர் நகரில், திருவொற்றியூர் மற்றும் எண்ணுார் ரயில் பாதையை ஒட்டி வசித்து வந்த மக்கள் குடி அமர்த்தப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, திடீர் நகர் செல்லும் வழியில், ராமசந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த, ஹரி, 21, கணேஷ் ஆகிய இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கும், அவ்வழியாக சென்ற திடீர் நகர் தேவராஜ், 27, என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.கையில் வைத்திருந்த சிறிய கத்தியால், ஹரியின் வயிற்று பகுதியில் தேவராஜ் கிழித்துள்ளார். தேவராஜின் செயலை தட்டி கேட்பதற்காக, ராமசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 10 பேர், நேற்று முன்தினம் இரவு திடீர் நகர் சென்றுள்ளனர். அங்கு வாக்குவாதம் கைகலப்பாக மாறி, தேவராஜ் மற்றும் அவரது நண்பர் ராஜா, 25, ஆகியோர், 10 பேரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில், ராமசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த, ஜி.வெங்கடேஷ், 35, வி.வெங்கடேஷ், 33, ரவி, 38, கஸ்துாரிய்யா, 35, பாலாஜி, 29, ஆகிய ஐந்து பேர் பலத்த வெட்டு காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்தனர். திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, ராமசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 100 பேர் மாதர்பாக்கம் -- கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட சாலையில் கூடினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர்.அதை தொடர்ந்து ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய, தேவராஜ் மற்றும் ராஜாவை பாதிரிவேடு போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராமசந்திராபுரம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், 120 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை