மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் கைது
03-Dec-2024
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்,பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி போலீசார் திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக காஞ்சிபுரம் நோக்கி செல்லும் தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில், இரண்டு பயணிகளிடம், 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். விசாரணையில் வேலுார் மாவட்டம் தாலிகால் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்,56, திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் காலனி சேர்ந்த குருசாமி,31 என தெரிய வந்தது. இவர்கள் நகரியில் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.திருத்தணி போலீசார், இருவரை கைது செய்தனர்.
03-Dec-2024