மேலும் செய்திகள்
புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவருக்கு சிறை
26-May-2025
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்துவதாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அண்ணாநகரில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், ஒரு பயணியின் உடமையில் 8 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், ஊத்துக்கோட்டையில் உள்ள வியாபாரி சோலைநாராயணன் வாங்கி வரச் சொன்னதாக கூறினார்.தகவலின்படி, ஆட்டோவில் வந்த பாண்டியன், 36, சோலைநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
26-May-2025