மேலும் செய்திகள்
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
13-Oct-2025
திருத்தணி: ஆந்திராவில் இருந்து மதுபாட்டில் மற்றும் குட்கா பொருட்களை கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி மதுவிலக்கு போலீசார், ஆற்காடுகுப்பம் கூட்டுச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, 20 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. ஆற்காடுகுப்பத்தைச் சேர்ந்த லட்சுமிபதி, 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த லலித், 50, என்பவர், 2 கிலோ குட்கா கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, லலித்தை கைது செய்தனர்.
13-Oct-2025