ஊத்துக்கோட்டையில் லாரி மோதி இரண்டு மின்கம்பங்கள் சேதம்
ஊத்துக்கோட்டை, எண்ணுார் பகுதியில் இருந்து லாரி ஒன்று, சிறு கற்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.ஊத்துக்கோட்டை நோக்கி அசுர வேகத்தில் சென்ற லாரி, அங்குள்ள வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி வயல்வெளிக்குள் சென்றது.அப்போது அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களை உடைத்துக் கொண்டு சென்றது. இதனால் மின்கம்பியில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் மின்சப்ளையை நிறுத்தினர்.