மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் கைது
13-Dec-2024
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை வழியே, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் தமிழக - ஆந்திர எல்லையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சென்னை மாதவரம், முருகன், 50, காஞ்சிபுரம் சிவா, 46, என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில், 79 பாக்கெட் குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது.இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
13-Dec-2024