உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் லாரியை பிடித்த எஸ்.ஐ.,யை மிரட்டிய இருவருக்கு சிறை

மணல் லாரியை பிடித்த எஸ்.ஐ.,யை மிரட்டிய இருவருக்கு சிறை

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே மணல் கடத்தி வந்த லாரியை பிடித்த, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில், திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கடம்பத்துார் நோக்கி வந்த அசோக்லைலண்ட் டிப்பர் லாரியை நிறுத்தக் கூறினர். லாரியை நிறுத்திய ஓட்டுநரும், அருகில் அமர்ந்திருந்த மற்றொருவரும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து இருவரையும் சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், மடக்கிப் பிடித்தனர். அப்போது பிடிபட்ட இருவரும், எஸ்.ஐ.,யை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர். பின் லாரியில் சோதனை செய்த போது, 2 யூனிட் ஆற்று மணல் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரான, குன்றத்துாரைச் சேர்ந்த பாபு, 52, மற்றும் லாரி உரிமையாளரான சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்த, கபாலி, 55, ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின், இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை