உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக்குகள் மோதி இருவர் பலி

பைக்குகள் மோதி இருவர் பலி

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை அடுத்த புதுார் மேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 64. இவர் நேற்று காலை 100 நாள் வேலைக்காக அவரது டி.வி.எஸ். 50 எக்ஸ்.எல் வாகனத்தில் சென்றார். புதுார் மேடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, வேலுார் மாவட்டம், காட்பாடியில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்த கே.டி.எம். பைக், மகேந்திரன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில், மகேந்திரனும் எதிரில் வந்த நபரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆர்.கே.பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், கே.டி.எம்., பைக்கில் வந்த நபர், காட்பாடியை சேர்ந்த உசேன், 24, என தெரியவந்தது. இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.இருவரின் சடலங்களை கைப்பற்றி, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை