உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் - பைக் மோதல் இருவர் படுகாயம்

கார் - பைக் மோதல் இருவர் படுகாயம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 22. இவர், நேற்று முன்தினம் மாலை 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், நண்பர் யுவராஜுடன் கனகம்மாசத்திரம் நோக்கி சென்றார்.திருவாலங்காடு ---- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில், புளியங்குண்டா அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர்.அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிகண்டனின் தாய் நீலா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை