உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொது சுவர் தகராறில் இருவர் படுகாயம்

பொது சுவர் தகராறில் இருவர் படுகாயம்

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை மங்கலம் கிழார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 71. இவருக்கும், இவரது வீட்டை ஒட்டி வசிக்கும் சதாசிவம் மகன் தணிகைமலை என்பவருக்கும், வீட்டு சுவர் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சதாசிவம் மற்றும் அவரது மகன்கள் தணிகைமலை, பெருமாள் உள்ளிட்டோர், வெங்கடேசன் வீட்டு சுவரை, இடித்து சேதப்படுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாள், படுகாயத்துடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை