உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெயிலில் காத்திருந்து தவிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள்

வெயிலில் காத்திருந்து தவிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள்

மீஞ்சூர்::மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள, ரயில்வே கேட் வழியாக, மீஞ்சூர் - காட்டூர் வழித்தடத்தில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பயணிக்கின்றனர்.ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் வாகன ஒட்டிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் வெயில் நேரங்களில், கேட்டில் காத்திருக்கும்போது சோர்வு அடைகின்றனர்.வாகன ஒட்டிகள் தவிப்பை போக்க, ரயில்வே கேட்டின் இருபுறமும், சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் உள்ளது போல் நிழல் பந்தல் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.பந்தல் அமைப்பதற்காக, ஒரு பகுதியில் இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்ட நிலையில், அடுத்த கட்ட பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. இது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கான சுரங்கபாதை அமைத்து தருவதாக தெரிவிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது ரயில்வே கேட்டின் இருபுறமும் நிழல் பந்தல் அமைக்கும் பணிகளும் ஜவ்வாக நீடிக்கிறது. திட்டம் நிறைவேறுவதற்குள் கோடைகாலமே முடிந்துவிடும்போல் இருக்கிறது. வாகன ஓட்டிகளின் சிரமங்களை அரசு கருத்தில் கொண்டு அனைத்து பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை