மேலும் செய்திகள்
வேகத்தடைக்கு வர்ணம் பூச வலியுறுத்தல்
03-Oct-2024
திருவாலங்காடு,திருவள்ளூர் -- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், நாராயணபுரம் கூட்ரோடு துவங்கி திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பள்ளி, அரசு அலுவலகங்கள் மற்றும் வளைவு சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி 11 பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மஞ்சாகுப்பம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது.வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
03-Oct-2024