உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் மிதக்கும் பயிர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

திருவள்ளூரில் மிதக்கும் பயிர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளத்தில் அடிக்கடி பயிர்கள் மூழ்குவதற்கு காரணமான நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம், ஆரணியாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகள் உள்ளன.இவற்றின் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.வடகிழக்கு பருவமழை காலங்களில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அத்தகைய நேரங்களில், இம்மாவட்டங்களில் உள்ள வயல்களை வெள்ளநீர் சூழ்ந்துவிடுகிறது. சமீபத்திய மழையால், இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சம்பவத்திற்கு நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இவற்றை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.பல நீர்வழித்தடங்கள் உரிய பராமரிப்பின்றி துார்ந்து கிடக்கின்றன. இவற்றை முழுமையாக சீரமைக்க வேண்டும். ஏரிகளை துார்வாரி சாலை பணிக்கு மண்ணை பயன்படுத்துகின்றனர்.இதேபோல, வரத்து கால்வாய்களை துார்வாரி, அந்த மண்ணை, சாலை, கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.அரசு நிதி வழங்கவில்லை என நீர்வளத்துறையினர் நழுவுகின்றனர். இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு விவசாயிகளின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை