உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெஞ்சல் புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்க வலியுறுத்தல்

பெஞ்சல் புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்க வலியுறுத்தல்

திருத்தணி:திருத்தணி --அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்தார்.இதில், திருத்தணி கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஆர்.கே.பேட்டை புதுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலங்களில் பெஞ்சல் புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்து வயல் வெளியில் விழுந்துள்ளன. இந்த மின்கம்பங்களை சீரமைத்து கொடுத்தால் தான் மின்மோட்டார் இயக்க முடியும், விவசாயம் செய்ய முடியும். மேலும் குமாராஜிப்பேட்டை சேர்ந்த விவசாய மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும். கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி