மேலும் செய்திகள்
குமாரகுப்பத்தில் முருகன் வீதியுலா
28-Jan-2025
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான், ஆண்டுதோறும், தை மாதத்தில் திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், இம்மாதம், 9ம் தேதி, காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கை குளத்தை வந்தடைவார்.பின், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கிருந்து, திருத்தணி -- சித்துார் சாலை, பைபாஸ் சாலை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் மண்டபத்திற்கு சுமைதாரர்கள் இழுத்து செல்வர்.பின், மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு, அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.பின், அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவில், உற்சவர் பெருமான் பட்டாபிராமபுரத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் மலைக்கோவிலை அடைவார்.
28-Jan-2025