உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்

இடிந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்

திருத்தணி:பெரியகடம்பூரில், வி.ஏ.ஓ., அலுவலகம் சேதம் அடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூர் கிராமத்தில், வி.ஏ.ஓ., எனும் கிராம நிர்வாக அலுவலகம், 15 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில், முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடத்தின் பல பகுதிகளிலும் சேதம் அடைந்துள்ளது. மழை காலத்தில், அலுவலகத்திற்குள் தண்ணீர் கசிந்து, ஆவணங்கள் நாசமாகின்றன. கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பெரியகடம்பூர் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை