உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலை பணி கிடப்பில் ஆபத்தான முறையில் செல்லும் வாகனங்கள்

இணைப்பு சாலை பணி கிடப்பில் ஆபத்தான முறையில் செல்லும் வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி,:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் எதிர் திசையில் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திரா நோக்கிய திசையில், கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பஜார் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து மகாலிங்க நகர் பகுதி வரையிலான, 600 மீட்டர் துார தேசிய நெடுஞ்சாலையில், இணைப்பு சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.பல ஆண்டு காலமாக அந்த இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், மகாலிங்க நகர் மற்றும் அதன் அருகே உள்ள பெட்ரோல் பங்க் வந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இணைப்பு சாலை வசதியின்றி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் ஆபத்தாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரண்டு கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டும் என்பதால், வேறு வழியின்றி எதிர் திசையில் செல்வதாக தெரிவிக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து விடுபட்ட மேற்கண்ட இணைப்பு சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ,பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ