திருத்தணி முருகன் கோவிலில் வேல் பூஜை
திருத்தணி, முருகன் கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று, வேல் பூஜை நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டியை ஒட்டி, தமிழகத்தில் 1,000 இடங்களில், வரும் 25 - 27ம் தேதி வரை வேல் பூஜை, கோ பூஜை, கந்த சஷ்டி பாராயணம் பாடப்படவுள்ளது. இதற்காக நேற்று, திருத்தணி முருகன் கோவிலில் வேல் பூஜை நடந்தது. இதில், இசையமைப்பாளர் கங்கை அமரன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலர் நந்தகுமார், இணை அமைப்பாளர் ஜோதி செந்தில்கண்ணன் உட்பட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று, மொத்தம் ஆறு வேல்களுக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். இந்த வேல்கள், வரும் 25ம் தேதி நடைபெறும் வேல் பூஜை, கோ பூஜையில் வைக்கப்படவுள்ளன.