உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாணாகுப்பம் தரைப்பாலம் படுமோசம் அச்சத்தில் கிராம மக்கள்

சாணாகுப்பம் தரைப்பாலம் படுமோசம் அச்சத்தில் கிராம மக்கள்

பள்ளிப்பட்டு:சாணாகுப்பம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டுள்ளதால், இந்த மழைக்கால வெள்ளத்தை தாக்குப்பிடிக்குமா என, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், சாணாகுப்பம் கிராமத்திற்கு லவா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். தினமும் ஏராளமானோர் ஆற்றை கடந்து, பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம், சித்துாருக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள லவா ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது பெருக்கெடுத்த வெள்ளத்தால், லவா ஆற்றில் அமைந்துள்ள பாதி தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. சேதமடைந்த பாலம், மண் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், லவா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தின் சீற்றத்தை மண்ணால் சீரமைக்கப்பட்டுள்ள பாலம் தாக்குப்பிடிக்குமா என்ற அச்சத்துடன், கிராம மக்கள் கடந்து வருகின்றனர். எனவே, தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ