உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பத்தில் சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் இருந்து ஆவலகுண்டா செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, கடந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனா ல், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், சாலை விரிவாக்க பணி இழுபறியாக உள்ளது. இது தொடர்பாக, கிராம பசுமை இயக்கத்தினர், தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகின்றனர். ஆனாலும், சாலை விரிவாக்க பணி கிடப்பிலேயே உள்ளது. இந்நிலையில், விரிவாக்க பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என, வருவா ய் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வலியுறுத்தி, கிராம பசுமை இயக்கம் மற்றும் மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின், கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ