உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ப ொது மயானம் கேட்டு கிராமவாசிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

ப ொது மயானம் கேட்டு கிராமவாசிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை வட்டம், வேளகாபுரத்தைச் சேர்ந்த கிராமவாசிகள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தியதில், தங்களுக்கு மயான வசதி வேண்டும் என கூறினர். மேலும், வந்திருந்த கிராமவாசிகள், தங்களது ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைப்பதாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். கலெக்டரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:எங்கள் கிராமத்தில், இதுநாள் வரை மயான இடம் இல்லை. ஏற்கனவே இருந்த மயானத்திற்கு செல்லும் வழியை, சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொது மயானம் அமைத்து தர வேண்டும். இல்லாவிட்டால், எங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டை தங்களிடம் ஒப்படைக்க வந்துள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை