உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீணாகி வரும் குப்பை வண்டிகள் ரூ.25 லட்சம் வரிப்பணம் அம்போ

வீணாகி வரும் குப்பை வண்டிகள் ரூ.25 லட்சம் வரிப்பணம் அம்போ

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இங்கு, இரண்டு மாதங்களுக்கு முன், 2024 - 25ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 15வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் வாயிலாக, தலா 2.54 லட்சம் ரூபாயில், 10 பேட்டரி குப்பை வண்டிகள், வழங்கப்பட்டன.ஆனால், இந்த குப்பை வண்டிகள் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல், ஊராட்சி அலுவலகமாக செயல்பட்டு வரும் கிராம இ - சேவை மையம் அருகே மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகின்றன.இது, வெங்கத்துார் ஊராட்சி பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஊராட்சி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் குப்பை அகற்றப்படாமல் தேங்கி வரும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. குப்பை வண்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஓட்டுனர் இல்லாததே காரணம் என, ஊராட்சி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பேட்டரி குப்பை வண்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை