மேலும் செய்திகள்
நரசிம்மர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
05-Apr-2025
நரசிங்கபுரம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.மரகதவல்லி தாயாரை அணைத்தபடி, ஏழரை அடி உயரத்தில் காட்சி தரும் மூலவர் நரசிம்மரை தரிசித்தால், கணவன் - மனைவி ஒற்றுமை மற்றும் செல்வம் செழிக்கும் என்பதால், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தினமும் வருகின்றனர்.நரசிம்மரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால் தீராத கடன், நோய், திருமண தடை உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பின், 2024 மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.இதையடுத்து, லட்சுமி நரசிம்மர் கோவில், சென்னையைச் சேர்ந்த உபயதாரர் லட்சுமி நரசிம்மன் என்பவர் நிதியின் கீழ், 25.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, ஹிந்து அறநிலையத் துறை உத்தரவின்படி, கடந்த 2023 ஜூலை 5ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.ஆனால், பணிகள் துவங்கி இரு ஆண்டுகளான நிலையில், ஓராண்டாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனவே, ஹிந்து அறநிலையத் துறையினர் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைவில் நிறைவேற்றி, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Apr-2025