உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரணிவராகபுரம் சாலையை சீரமைக்கும் பணி எப்போது?

தரணிவராகபுரம் சாலையை சீரமைக்கும் பணி எப்போது?

திருத்தணி:தரணிவராகபுரம் ஊராட்சி அன்னபூரணி நகரில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் ஊராட்சியில் உள்ள அன்னபூரணி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், மழைநீர் தேங்கியும் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.மேலும், இச்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் தவறி விழுந்து காயமடைகின்றனர்.இதுதொடர்பாக, பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி