மேலும் செய்திகள்
உருக்குலைந்த உடற்பயிற்சி கூடம்
03-Mar-2025
திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தில் கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இதன் அருகே, கிராம இளைஞர்களின் உடல் நலம் மேம்படும் வகையில், கடந்த 2023 -- 24ம் ஆண்டு, 15வது நிதி குழு மானியத்தில், 4.11 லட்சம் ரூபாய் நிதியுதவியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடற்பயிற்சி கூடம், ஆறு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது.ஆனால், உடற்பயிற்சி உபகரணங்கள் கொண்டு வரப்படவில்லை. மேலும், புதிய உடற்பயிற்சி கூடம் திறக்காமல் உள்ளதால், கிராம இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதிய கட்டடம் முன் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூனிமாங்காடு இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
03-Mar-2025