ஊத்துக்கோட்டை பஸ் நிலைய கழிப்பறை திறப்பது எப்போது?
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியர் வசதிக்காக கழிப்பறை அமைக்கப்பட்டது. அதிகப்படியான பயணியர் வருகையால் இந்த கழிப்பறை போதுமானதாக இல்லை.இதனால், 'துாய்மை இந்தியா திட்டம் - 2.0' திட்டத்தின்கீழ், 2022 - 23ம் ஆண்டு 20.64 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, புதிய கழிப்பறை கட்டடம் கட்டும் பணி கடந்த மாதம் முடிந்தது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.எனவே, ஊத்துக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.