உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆபத்தான சாலை வளைவு தடுப்பு அமைக்கப்படுமா?

 ஆபத்தான சாலை வளைவு தடுப்பு அமைக்கப்படுமா?

தி ருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் -- பரேஸ்புரம் சாலை ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வேணுகோபாலபுரத்தில் ஏரிக்கால்வாய் பகுதியில் சாலையில் இரண்டு இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. வாகன ஓட்டிகள் சற்று அசந்தாலும், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. வளைவு இருப்பதற்கான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால், இரவு நேரத்தில், வாகன ஓட்டிகள் கவிழ்ந்து விழுந்து, விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, வளைவுகள் உள்ள இடத்தில், சாலையோர தடுப்பு அமைக்க வேண்டும். - கே.சிவராஜ், பரேஸ்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை