உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பதிவெண் இன்றி இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை பாயுமா?

பதிவெண் இன்றி இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை பாயுமா?

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், சிலர், தங்களது வாகனங்களில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் வாகன பதிவு எண்களை எழுதியுள்ளனர்.சிலர், வாகன பதிவு எண் எழுதாமல், நம்பர் பிளேட்டில், தங்களுக்கு பிடித்த வாசகங்கள் மற்றும் காதலி, மனைவி, குழந்தைகள், நடிகர்களின் பெயர்கள் மற்றும் திரைப்படங்களின் பெயர்களை எழுதியுள்ளனர்.இதுபோன்ற வாகனங்களால், ஏற்படும் விபத்தின் போது, பாதிக்கப்பட்டவர்கள், புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இரு சக்கர வாகனங்களில், நம்பர் பிளேட்டுகளில், எண்கள் எழுதும் முறை, அளவு குறித்து, அரசு அறிவித்துள்ளது. மேலும், நம்பர் பிளேட்டுகளில், வாகன எண்களை மட்டும் எழுத வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், சிலர், தங்களது வாகனங்களில், நம்பர் பிளேட்டுகளில், அரசு அறிவிப்புபடி, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு, எண்களை எழுதாமல் உள்ளனர். இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீஸார் மெத்தனமாக உள்ளனர்.இதனால், திருவள்ளூர், திருவாலங்காடு, திருத்தணி உட்பட, மாவட்டம் முழுதும், போக்குவரத்து விதிகளை மீறி எழுதப்பட்ட எண்கள் மற்றும், பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள் வலம் வருவது அதிகரித்துள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலர்கள், இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை