உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்புழு உரக்கிடங்கு சீரமைக்கப்படுமா?

மண்புழு உரக்கிடங்கு சீரமைக்கப்படுமா?

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராமத்தில், சுடுகாடு அருகே அமைக்கப்பட்டுள்ளது மண்புழு உரக்கிடங்கு. 2014- - -15ம் ஆண்டு, 1 லட்சத்து, 10,000 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த உரக்கிடங்கு கொட்டகையை விவசாயிகள் இயற்கை உரம் தயாரிக்க வேண்டி பயன்படுத்தி வந்தனர்.இதனால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி விடப்பட்டுள்ளதுடன் செடிகள் சூழ்ந்து வளர்ந்துள்ளன.மண்புழு உரக்கிடங்கை சூழ்ந்துள்ள செடிகளை அகற்றி, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ