உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி புதிய பேருந்து நிலையம் கிருத்திகைக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

திருத்தணி புதிய பேருந்து நிலையம் கிருத்திகைக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

திருத்தணி, திருத்தணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை, ஆடிக்கிருத்திகை விழாவிற்குள் திறக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.60 ஏக்கர் பரப்பில், 16 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.பேருந்து நிலைய நுழைவாயில், திருத்தணி முருகன் கோவில் கோபுரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நிலையத்தில் பேருந்துகள் நிற்பதற்கு தரைத்தளம் மற்றும் முன்பக்க சுற்றுச்சுவர் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.திருத்தணி முருகன் கோவிலில், அடுத்த மாதம், 14 - 18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடக்கிறது. இவ்விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர்.இவர்கள் பேருந்து, வேன், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் முருகன் கோவிலுக்கு வருவதால், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதியில்லாமல், திருத்தணிக்கு வெளியே, 5 கி.மீ., துாரத்தில் நிறுத்த வேண்டியுள்ளது.இதனால் பக்தர்கள் அங்கிருந்து மலைக்கோவிலுக்கு நடந்து வரவேண்டும். புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வரும் என்பதால், பக்தர்கள் சிரமப்பட தேவையில்லை.எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய பேருந்து நிலைய பணிகளை துரிதப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை