உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடை கால்வாயை சூழ்ந்த ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஓடை கால்வாயை சூழ்ந்த ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பெரியகாவணம் பகுதியில் இருந்து, உப்பளம், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு கிராமங்கள் வழியாக செல்லும் ஓடைக்கால்வாய் ஆசானபூதுார் ஏரியில் முடிகிறது.இது ஏரிக்கு மழைநீரை கொண்டு செல்வதுடன், அதில் தேங்கும் தண்ணீர். கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கும், விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது.மேற்கண்ட கிராமங்களுக்கு, 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து. குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது. இதை குடிக்க, சமைக்கவும், ஓடையில் தேங்கும் தண்ணீரை குளிக்க, துணி துவைக்க உள்ளிட்டவைகளுக்கும் கிராமவாசிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இந்நிலையில், தற்போது. ஓடையில் ஆகாயத்தாமரை சூழ்ந்து கிடப்பதால், கிராமவாசிகள் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.ஓடையில் தண்ணீர் இருந்தும், கிராமவாசிகளுக்கு அது பயன்படாமல் இருப்பதால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மேற்கண்ட ஓடையில், ஆகாயத்தாமரைகளை அகற்றி, கிராமவாசிகள் எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆங்காங்கே படித்துறைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை