மேலும் செய்திகள்
புதுப்பாளையம் தடுப்பணை துார் வாருவது அவசியம்
09-Jun-2025
பொன்னேரி, ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ரெட்டிப்பாளையம் தடுப்பணை பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டும், இரும்பு தடுப்புகள் சேதமடைந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது.பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, மழைக்காலங்களில் 0.30 டி.எம்.சி., மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது.இதனால், ஆற்றின் கரையோர கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட தடுப்பணை பகுதி உரிய கண்காணிப்பு இன்றி உள்ளது.கடந்தாண்டு மழையின்போது, தடுப்பணையின் கரைகளின் அருகே உள்ள கான்கிரீட் கட்டுமானங்களை ஒட்டி மண் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. தற்போது, அவை முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இரும்பு தடுப்புகள் துருப்பிடித்து, உடைந்துள்ளன.பல்வேறு பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட மணல், தடுப்பணை அருகே குவிந்து கிடக்கிறது. இதனால், மழைநீர் முழு கொள்ளளவிற்கு சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், நீர்வளத்துறையினர், ரெட்டிப்பாளையம் தடுப்பணை பகுதியை முழுமையாக ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
09-Jun-2025