உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தோழியை மிரட்டி பணம் பறிப்பு ஆபாச படம் எடுத்த பெண் கைது

தோழியை மிரட்டி பணம் பறிப்பு ஆபாச படம் எடுத்த பெண் கைது

திருவள்ளூர்:கடம்பத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் தற்காலிக பணிபுரிந்து வரும் 35 வயது பெண் பணியாளர், கடந்த மாதம் 10ம் தேதி கடம்பத்துார் காவல் நிலையம் அருகே இருந்த கடையில் பழச்சாறு குடிக்க வந்தார். அந்த கடையை, கடம்பத்துார் இந்திரா நகரைச் சேர்ந்த, ஹேமலதா, 35 என்பவர் நடத்திவந்தார். இவர், பெண் பணியாளரின் பள்ளியில் படித்தவர். அந்த கடையில் இருந்த ஹேமலதாவின் கள்ளக்காதலனான, பிரையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன், 42 என்பவர் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து, ேஹமலதா அழைப்பை ஏற்று, அவரின் வீட்டிற்கு பெண் பணியாளர் சென்றுள்ளார்.அவருடன் ஜெயந்தனும் சென்றுள்ளார். திடீரென ஜெயந்தன் மற்றும் பெண் பணியாளரை கீழே தள்ளிய ஹேமலதா, இருவரையும் தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து தராறில் ஈடுபட்டுள்ளார். பெண் பணியாளரின் கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் நகையை பறித்துள்ளார்.இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ேஹமலதாவும், ஜெயந்தனும் அந்த பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியதையும், செயின் பறித்ததையும் ஒப்புக்கொண்டனர். நகையை எடுத்து வருவதாக வீட்டிற்கு சென்ற, ஹேமலதா தலைமறைவானார்.இதையடுத்து ஜெயந்தனை கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, நகரி பகுதியில் பதுங்கியிருந்த ஹேமலதாவை சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ