மேலும் செய்திகள்
நான்கு பேரை காப்பாற்றி டிரைவர் மாரடைப்பால் பலி
08-Jan-2025
திருவாலங்காடு:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சி, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 27; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி 24. கடந்த வாரம் ரேவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று மாலை சிகிச்சை முடிந்து ரேவதி, கணவர் அருண்குமார் உடன், 'ஹூரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி வந்தனர்.கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி, அருண்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார். கணவர் அருண்குமார் படுகாயம் அடைந்தார். கனகம்மாசத்திரம் போலீசார், ரேவதி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அருண்குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சென்ராயன், 36, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.
08-Jan-2025