உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வரும் 31ல் படித்திருவிழா திருத்தணியில் பணி தீவிரம்

 வரும் 31ல் படித்திருவிழா திருத்தணியில் பணி தீவிரம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடக்கும் படித்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், வரும் 31ம் தேதி படித்திருவிழாவும், ஜன., 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவர். இதையடுத்து, கோவில் நிர்வாகம், மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான குடில்களில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகிறது. மேலும், வாகன நிறுத்துமிடம் மற்றும் 'சிசிடிவி' கேமராக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகின்றன. நேற்று, திருத்தணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள், மலைக்கோவில், மலைப்பாதை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். மலையடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், அதற்கு செல்வதற்கான வழி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்