சிப்காட் வளாக கால்வாய்களை துார்வாரும் பணிகள் மும்முரம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலையோர மழைநீர் வடிகால்வாய்களில் துார்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மொத்தம் 22 கி.மீ., சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் ஓரம் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் துார்ந்து போயுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழையின் போது, கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தொழிற்சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதற்கு தீர்வு காணும் வகையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிப்காட் வளாக கால்வாய்கள், பொக்லைன் மூலம் துார்வாரும் பணிகளை, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.