உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் சேதமடைந்த தரைப்பாலம் பெட்டி பாலமாக்கும் பணிகள் விறுவிறு

கும்மிடியில் சேதமடைந்த தரைப்பாலம் பெட்டி பாலமாக்கும் பணிகள் விறுவிறு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரிநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் மீது தரைப்பாலம் இருந்தது.ஒவ்வொரு மழைக்காலங்களிலும், கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் தரைப்பாலம் முழ்குவதும், மூன்று நாட்கள் போக்குவரத்து பாதிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. 2023ம் ஆண்டு கனமழையின் போது, தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்றதால், மணல் மூட்டைகள் வைத்து சீரமைக்கப்பட்டது.இந்த தரைப்பாலத்தை உயர்மட்ட பெட்டி பாலமாக மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தரைப்பாலத்தை உயர்மட்ட பெட்டி பாலமாக மாற்றி, சாலையை புதுப்பிக்க 1.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இருபது நாட்களுக்கு முன் பாலம் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், தற்போது துரிதமாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'நடப்பாண்டு மழைக்காலத்திற்குள், இப்பாலம் பயன்பாட்டிற்கு வரும்' என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !