உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து தொழிலாளர் பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் பம்ப் மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவை சேர்ந்தவர் தனசேகர், 35. பெட்ரோல் பங்குகளில் பம்ப்கள் நிறுவும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பம்ப் மாற்றும் வேலையில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்தார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், இறந்தவரின் உடலை, பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ