மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
செவ்வாப்பேட்டை:செவ்வாப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்செயன், 31; கட்டட தொழிலாளி. இவர், செவ்வாப்பேட்டை அடுத்த அயத்துார் பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் டியூப் லைட் எடுத்து வைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக டியூப் லைட்டுக்கு செல்லும் மின் ஒயர் அவர் மீது பட்டு, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.